ஏகனே உன்னைப் போற்றினோம் - எங்கள்
ஏந்தன் வழியில் சேரவே
கல்வியில் நாம் ஒங்கிடா - உந்தன்
கருணை தந்தமை காருமே
(ஏகனே)
முத்து நிகர் கலை கூடமே
முனவரா கனி\; கல்லூரி
கல்வி தரும் அரசங்கமும்
கலை ஆசான் அதிபர் பெற்றோர்களும்
காலம் முழுதும் வாழவே - இரு
கைகளை நாம் எந்தினோம்
(ஏகனே)
பாலர் எங்கள் மனதிலே – நற்
பண்புகள் மலர்ந்தோங்கவே
வாட்டும் துயரம் நீங்கிடும்
வளமான கல்வி சேரவே
மாட்சிமை தரும் வாழ்வினை - இளம்
மாணவர் நாம் வேண்டினோம்
( ஏகனே)
ஒற்றுமை உணர்வோடு நாம்
ஒரு தாயின் மக்கள்போலவே
சாதி மத
சாந்தமாய் நாம் வாழவே
நம் நாட்டு மக்கள்
சிறப்புற நாம் வேண்டினோம்
( ஏகனே)
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யார்ப்பி சல்லி அலைஹி வஸல்லிம்